என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » புழுங்கல் அசிரி
நீங்கள் தேடியது "புழுங்கல் அசிரி"
தட்டுப்பாடு காரணமாக புழுங்கல் அரிசி, ரேஷன் கடைகளுக்கு தேவையான அளவு வராததால் பொதுமக்களுக்கு 5 கிலோ அரிசி தான் வழங்கப்படுகிறது. மீதம் பெறுவோருக்கு பச்சரிசி வழங்குகிறார்கள். #Rationshop #ParboiledRice
சென்னை:
ரேஷன் கடைகளில் புழுங்கல் அரிசி, பச்சரிசி எது விருப்பமோ, அதை விருப்பத்துக்கு ஏற்ப மக்கள் இதுவரை வாங்கி வந்தனர்.
ஆனால் இப்போது புழுங்கல் அரிசி, ரேஷன் கடைகளுக்கு தேவையான அளவு வராததால் பொதுமக்களுக்கு 5 கிலோ அரிசி தான் வழங்கப்படுகிறது. மீதம் பெறுவோருக்கு பச்சரிசி வழங்குகிறார்கள்.
ஒவ்வொரு கார்டுதாரர்களுக்கும் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு 5 கிலோ வீதம் கணக்கிட்டு ரேஷன் அரிசி வழங்க வேண்டும்.
வீட்டில் 4 பேர் இருந்தால் 20 கிலோ அரிசி, 5 பேர் இருந்தால் 25 கிலோ அரிசி தர வேண்டும். ஆனால் சென்னை மற்றும் புறநகரில் உள்ள கடைகளில் பச்சரிசிதான் கிடைக்கிறது. புழுங்கல் அரிசி கேட்கும் அளவுக்கு கொடுப்பதில்லை.
இதுபற்றி ரேஷன் கடைக்காரர்கள் கூறுகையில், 100 மூட்டை புழுங்கல் அரிசி தேவை என்றால் 30 மூட்டை அரிசிதான் குடோன்களில் இருந்து தருகிறார்கள். 70 மூட்டை பச்சரிசி கொடுக்கிறார்கள்.
உயர் அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லியும் பிரயோஜனம் இல்லை. தேவையான அளவு புழுங்கல் அரிசியை கடைக்கு அனுப்புவதில்லை என்றனர்.
இதுபற்றி உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, புழுங்கல் அரிசி தட்டுப்பாடு இருப்பது எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. அதை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். விரைவில் இந்த குறைபாடு நீங்கும் என்றார்.
ரேஷன் கடைகளுக்கு சம்பந்தப்பட்ட நபர்தான் வந்து பொருட்கள் வாங்க வேண்டும் என்பதற்காக ‘கைரேகை’ பதிவு முறை விரைவில் அறிமுகப்படுத்த பட இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். #Rationshop #ParboiledRice
ரேஷன் கடைகளில் புழுங்கல் அரிசி, பச்சரிசி எது விருப்பமோ, அதை விருப்பத்துக்கு ஏற்ப மக்கள் இதுவரை வாங்கி வந்தனர்.
ஆனால் இப்போது புழுங்கல் அரிசி, ரேஷன் கடைகளுக்கு தேவையான அளவு வராததால் பொதுமக்களுக்கு 5 கிலோ அரிசி தான் வழங்கப்படுகிறது. மீதம் பெறுவோருக்கு பச்சரிசி வழங்குகிறார்கள்.
ஒவ்வொரு கார்டுதாரர்களுக்கும் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு 5 கிலோ வீதம் கணக்கிட்டு ரேஷன் அரிசி வழங்க வேண்டும்.
வீட்டில் 4 பேர் இருந்தால் 20 கிலோ அரிசி, 5 பேர் இருந்தால் 25 கிலோ அரிசி தர வேண்டும். ஆனால் சென்னை மற்றும் புறநகரில் உள்ள கடைகளில் பச்சரிசிதான் கிடைக்கிறது. புழுங்கல் அரிசி கேட்கும் அளவுக்கு கொடுப்பதில்லை.
இதுபற்றி ரேஷன் கடைக்காரர்கள் கூறுகையில், 100 மூட்டை புழுங்கல் அரிசி தேவை என்றால் 30 மூட்டை அரிசிதான் குடோன்களில் இருந்து தருகிறார்கள். 70 மூட்டை பச்சரிசி கொடுக்கிறார்கள்.
பொது மக்களில் பலர் புழுங்கல் அரிசி பயன்படுத்துவதால் அனைவருக்கும் அரிசி கிடைக்க வேண்டும் என்பதற்காக 5 கிலோ வீதம் புழுங்கல் அரிசியை கொடுத்துவிட்டு மீதத்துக்கு பச்சரிசியை வழங்குகிறோம்.
இதுபற்றி உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, புழுங்கல் அரிசி தட்டுப்பாடு இருப்பது எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. அதை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். விரைவில் இந்த குறைபாடு நீங்கும் என்றார்.
ரேஷன் கடைகளுக்கு சம்பந்தப்பட்ட நபர்தான் வந்து பொருட்கள் வாங்க வேண்டும் என்பதற்காக ‘கைரேகை’ பதிவு முறை விரைவில் அறிமுகப்படுத்த பட இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். #Rationshop #ParboiledRice
×

X